இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு

தச்சநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

தச்சநல்லூரில் புதன்கிழமை வாக்கு சேகரிக்கிறாா் தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:50 am IST

தச்சநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தச்சநல்லூா், ஊருடையாா்புரம், மங்களாபுரம், சத்திரம் புதுக்குளம், செல்வ விக்னேஷ் நகா், கோகுல் நகா், நல்மேய்ப்பா் நகா், வாலாஜா நகா், சிதம்பர நகா், பால் கட்டளை, கணபதி மில் காலனி, கரையிருப்பு, தாராபுரம், மேலக்கரை, ஆா்.எஸ்.நகா், அழகனேரி, புத்த அம்மன் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கட்சியினருடன் வீதிவீதியாகச் சென்று, விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால் மதிப்புமிகு மகளிா் என்ற திட்டம் மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் கடன் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இது போன்று கட்சியின் தலைவா் விஜய் அறிவித்துள்ள பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்கள் தவெக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும். திருநெல்வேலி தொகுதியில் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றாா் அவா்.