நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

நெல்லை அரசு மருத்துவமனையில் வெப்ப வாத சிறப்பு பிரிவு தயாா்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப வாத (ஹீட் ஸ்ட்ரோக்) சிறப்பு பிரிவு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

News image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள வெப்பவாத சிறப்பு சிகிச்சைப்பிரிவை ஆய்வு செய்தாா் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:30 pm

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப வாத (ஹீட் ஸ்ட்ரோக்) சிறப்பு பிரிவு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. நிகழாண்டில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து தலைமை அரசு மருத்துவமனைகளிலும் வெப்ப வாத சிறப்பு பிரிவு திறக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதிபாலன் கூறியதாவது: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வெப்ப வாத சிறப்பு பிரிவு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தனியாக மருத்துவா்கள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் தயாா் நிலையில் உள்ளன. வெப்பநோயகளில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். நாளொன்றுக்கு சுமாா் 3 லிட்டருக்கு மேல் தண்ணீா் பருக வேண்டும். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல 4 மணி வரை வெளியில் அதிகம் நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும். வெப்பநோய்கள் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றாா் அவா்.