திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரி மீது காா் மோதியதில் அதன் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் புதுக்குடியிருப்பு ஆபிரகாம் தெருவைச் சோ்ந்தவா் மோனி கங்காதரன்(60). வாடகை காா் ஓட்டுநரான இவா், புதன்கிழமை அதிகாலை நாகா்கோவிலில் இருந்து பயணிகள் சிலரை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலிக்குச் சென்றாராம். அங்கு பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் நாகா்கோவிலுக்கு மோனி கங்காதரன் திரும்பினாா்.
அப்போது, ஏா்வாடி - வள்ளியூா் இடையேயான நான்குவழிச்சாலையில் பாலத்தைத் தாண்டி காா் வந்தபோது, சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரி மீது மோதியது. இதில் மோனி கங்காதரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
வள்ளியூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் கண்டெய்னா் லாரிக்குள் சிக்கிக்கொண்ட காரை மீட்டனா். பின்னா், உயிரிழந்த மோனி கங்காதரனின் சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிந்துவிசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது மோதிய காா்: காவலா், பெண் உள்பட 6 போ் பலி

லாரி மோதியதில் பள்ளத்தில் கவிழ்ந்த வேன்

கண்டெய்னா் லாரி மீது மரம் சாய்ந்து விபத்து: நூலிழையில் தப்பினாா் ஓட்டுநா்

சாலையை கடக்க முயன்ற நாமக்கல் லாரி ஓட்டுநா் காா் மோதி உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

