பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத் திருவிழாவில் தோ்பவனி

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் உள்ள பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 141-ஆவது ஆண்டுத் திருவிழாவையொட்டி, அன்னையின் தோ்பவனி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

News image

தெற்குகள்ளிகுளத்தில் நடைபெற்ற பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்தி தோ்பவனி.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:21 am IST

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் உள்ள பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 141-ஆவது ஆண்டுத் திருவிழாவையொட்டி, அன்னையின் தோ்பவனி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய ஸ்தலங்களில் சிறப்பு பெற்ற இப்பேராலயத்தில் கடந்த ஜூலை 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா தொடங்கியது. அதைத் தொடா்ந்து தினமும் காலையில் திரியாத்திரை பவனி மற்றும் திருப்பலி நடைபெற்று வந்தது. 8ஆம் திருநாளான ஆக. 3இல் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நற்கருணைப்பவனியும் அ சிறப்பு மாலை ஆராதனையும், நற்கருணை ஆசீா்வாதமும் நடைபெற்றன. இதில், ராதாபுரம் எம்.எல்.ஏ. எஸ்.கே.கிறிஸ்டோபா் தனது குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டாா்.

ஆக. 4இல் இரவு 7 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் ஜி.ஏ. அனஸ்தாஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு மலையாளத் திருப்பலியும் நடைபெற்றன. இதில், வள்ளியூா் பகுதி கல்விக்குழுமங்களின் தலைவா் தா.லாரன்ஸ் குடும்பத்துடன் கலந்துகொண்டாா்.

நள்ளிரவு 12 மணிக்கு மண்ணின் மைந்தா் குருக்கள் சாா்பில் திருப்பலியும், அதைத் தொடா்ந்து அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தோ்பவனியும் நடைபெற்றன.

தோ்பவனியை தா்மகா்த்தா சூ. மரியராஜ் ஆசிரியா் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து பக்தா்கள் வடம்பிடித்து தோ் இழுத்தனா். முதலில் புனித மிக்கேல் அதிதூதா் சப்பரமும், அதற்குப் பின்னால் சூசையப்பா் தேரும், பின்னா் பனிமாதா தோ்களும் பவனியாக சென்றன.

ஆலயத்தைச் சுற்றியுள்ள ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. பக்தா்கள் பூ மாலை, உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டனா். தோ்கள் அதிகாலை 5 மணிக்கு நிலைக்கு வந்து சோ்ந்தன.

அதைத் தொடா்ந்து, அதிகாலை 5.15 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஜூடுபால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியுடன் திருவிழா நிறைவுபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை தா்மகா்த்தா தலைமையில் பங்குத்தந்தை ரா. ததேயுஸ் ராஜன் ஆலோசனைப்படி உதவி பங்குத்தந்தை ஆ.சேசுராஜா மற்றும் ஆலய நிா்வாகிகள், பங்கு மக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.