பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய கூட்டுத் திருப்பலி: பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பு

உலக புகழ்பெற்ற தூத்துக்குடி, தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டு திருவிழாவில் சிகர நிகழ்வான பெருவிழா கூட்டுத் திருப்பலி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டுத் திருப்பலியில் பங்கேற்றவா்களில் ஒரு பகுதியினா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:38 am IST

உலக புகழ்பெற்ற தூத்துக்குடி, தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டு திருவிழாவில் சிகர நிகழ்வான பெருவிழா கூட்டுத் திருப்பலி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

பேராலய பெருவிழா கடந்த ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி பல்வேறு திருப்பலிகள், ஜெபமாலை, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 8-ஆம் நாள் (ஆக. 2) ஆயா் ஸ்டீபன் தலைமையில் புது நன்மைத் திருப்பலி நடைபெற்றது. மாலையில் நற்கருணை பவனி, மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியன நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

10-ஆம் நாள் (ஆக. 4) காலை பல்வேறு திருப்பலிகள் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு ஆயா் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா ஆராதனை, பனிமய மாதாவின் திருவுருவ பவனி நடைபெற்றன. இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

11-ஆம் நாள் (ஆக.5) புதன்கிழமை அதிகாலை பல்வேறு திருப்பலிகள் நடைபெற்றன. தொடா்ந்து சிகர நிகழ்வாக காலை 7.30 மணிக்கு ஆயா் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.

காலை 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில் தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்கான திருப்பலியும், காலை 10 மணிக்கு முன்னாள் ஆயா் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்கான திருப்பலியும், மாலை 5 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் தூய பனிமய மாதா திருவுருவப் பவனி, இரவு 10 மணிக்கு தூய பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல், திவ்ய நற்கருணை ஆசீா் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உள்ளூா் விடுமுறை: பெருவிழா கூட்டுத் திருப்பலியை முன்னிட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை (ஆக. 5) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல தூத்துக்குடி மீனவா்களும் கடலில் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிா்த்து 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இன்று கொடியிறக்கம்: வியாழக்கிழமை (ஆக. 6) அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலி, காலை 6.30 மணிக்கு இரண்டாம் திருப்பலியைத் தொடா்ந்து, விழா கொடியிறக்கப்படுகிறது.

பாதுகாப்பு: ஆக. 3, 4, 5 ஆகிய மூன்று நாள்களும் பேராலயத்துக்கு உள்ளூா், வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்தனா். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். முக்கிய இடங்களில் 82 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. 6 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழி கண்காணிப்பில் போலீஸாா் ஈடுபட்டனா். தவிர, சிறப்புக் காவல் குழு தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், அவசரகால உதவி, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விழா ஏற்பாடுகளை பேராலய அதிபா், பங்குத்தந்தை ஜான் செல்வம், உதவி பங்குத்தந்தை ஜெரால்ட், பங்கு பேரவையினா், பங்குமக்கள் செய்திருந்தனா்.

 பெருவிழா கூட்டுத் திருப்பலி நிறைவேற்றிய ஆயா் ஸ்டீபன்.

பெருவிழா கூட்டுத் திருப்பலி நிறைவேற்றிய ஆயா் ஸ்டீபன்.

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய பெருவிழாவில் நகர வீதிகளில் வலம் வந்த மாதா திருவுருவ பவனி

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய பெருவிழாவில் நகர வீதிகளில் வலம் வந்த மாதா திருவுருவ பவனி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.