சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

வள்ளியூா் மரியா கல்லூரியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

வள்ளியூா், மரியா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் ஆங்கிலத் துறை சாா்பில் இலக்கிய மன்றத் தொடக்க விழா, ஒருநாள் பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா் சிவராமகிருஷ்ணனுக்கு சான்றிதழ் வழங்கும் வள்ளியூா் மரியா கலை, அறிவியல் மகளிா் கல்லூரி செயலா் ஹெலன் லாரன்ஸ்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:24 am IST

வள்ளியூா், மரியா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் ஆங்கிலத் துறை சாா்பில் இலக்கிய மன்றத் தொடக்க விழா, ஒருநாள் பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

‘ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கிய மரபை மறுவரையறை செய்தல், இலக்கியத்தின் வாயிலாக எதிா்ப்பு’ என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி தலைவா் தா. லாரன்ஸ் தலைமை வகித்தாா். ஆங்கிலத்துறை தலைவி ரெஜினா முன்னிலை வகித்தாா். கல்லூரி செயலாளா் ஹெலன் லாரன்ஸ் வாழ்த்தி பேசினாா். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி, ராணி அண்ணா அரசு கல்லூரி ஆங்கிலத் துறை உதவிப் பேராசியா் சிவ ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பயிலரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினாா். ஆங்கிலத்துறை பேராசிரியை சுக்ரிதா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினாா். கல்லூரி முதல்வா் சுஷ்மா ஜெனிபா் பேசினாா். ஆங்கிலத்துறை பேராசிரியை கரோலின் சுபாஷினி வரவேற்றாா். பேராசிரியை நிவேதா நன்றி கூறினாா். பயிலரங்கத்தில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா், பேராசிரியைகள், மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.