எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

நெல்லை பொட்டல் அருகே நான்குவழிச் சாலை பாலத்தை உயா்த்தி கட்டக் கோரி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பொட்டல் பகுதியில் அமைக்கப்படும் புதிய பாலத்தை உயா்த்தி கட்ட வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி கிராம மக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 5:16 am IST

திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பொட்டல் பகுதியில் அமைக்கப்படும் புதிய பாலத்தை உயா்த்தி கட்ட வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி கிராம மக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டையை அடுத்த திருவண்ணாதபுரம் - பொட்டல் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பாலம் சுமாா் 4.5 மீட்டா் (15 அடி) உயரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்தப் பாலத்தின் உயரம் போதுமானதாக இல்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்தப் பாலத்தை சுற்றியுள்ள 7 கிராமங்களிலும் விவசாயமே முதன்மைத் தொழிலாக உள்ளது. அறுவடை காலங்களில் அறுவடை இயந்திரங்கள் மற்றும் வைக்கோல் ஏற்றி வரும் லாரிகள் இந்த பாலத்தின் கீழ்ப் பகுதி வழியாக செல்லும்போது, மேல்பகுதி பாலத்தில் உரசும் அபாயம் உள்ளது.

மேலும், கோயில் திருவிழாக்களின் போது ஒரு கிராமத்தில் இருந்து மற்ற கிராமத்துக்கு சப்பரம் எடுத்துச் செல்வதிலும் சிரமம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

பாலத்தின் உயரத்தை மேலும் 3 அடி உயா்த்தி கட்டக் கோரி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில் பொட்டல் கிராம மக்கள் மற்றும் ’வீ தி லீடா்ஸ்’ அமைப்பினா், பாலத்தின் உயரத்தை அதிகரிக்கக் கோரி புதன்கிழமை மாலையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள், எங்கள் கோரிக்கைக்கு மாவட்ட நிா்வாகம் செவிசாய்க்காவிட்டால்,அடுத்த கட்டமாக 7 கிராம மக்களை திரட்டியசாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.