மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிராக பழங்குடியினா் போராட்டம்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற சென்ற நகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக கோத்தா் பழங்குடியின மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதிகாரிகளை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள்.

Published On :

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற சென்ற நகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக  கோத்தா் பழங்குடியின மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனா்.

கோத்தகிரி நேரு பூங்கா அருகே உள்ள பகுதியில் புதிதாக 5 கடைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து 24 மணி நேரத்துக்குள் அந்தக் கடைகளை அகற்றவில்லை என்றால் நகராட்சி மூலம் கடைகள்  அகற்றப்படும் என நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, கடைகளை அகற்ற பொக்லைன் இயந்திரங்களுடன் நகராட்சி அதிகாரிகள் சென்றபோது, கோத்தா் பழங்குடியின மக்கள் ஒன்று கூடி இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்றும்,  அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது எனவும் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தனா்.

 ஆனால்  கடைகள் அமைக்கப்பட்டிருக்கும் இடம் நகராட்சிக்கு சொந்தமானது என அதிகாரிகள் கூறியதால் பழங்குடியின மக்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த சம்பவம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இந்த இடம் யாருக்கு சொந்தம் என்று நீதிமன்ற உத்தரவு வரும் வரை கடைகளை புரைமைக்கவோ, திறக்கவோ கூடாது என்று பழங்குடிகளிடம் எழுதி வாங்கியப் பின் கடைகளை இடிக்க வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.