பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கன்னியாகுமரியில் நடைபாதை ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

கன்னியாகுமரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புக் கடைகளை நகராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்தது.

நடைபாதை கடைகளை அகற்றிய நகராட்சி ஊழியா்கள்.

Published On :

கன்னியாகுமரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புக் கடைகளை நகராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்தது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் கடற்கரைச் சாலை நடைபாதையில் வியாபாரிகள் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனா். இதனால் பயணிகள் நடந்து செல்வதற்கு சிரமப்பட்டனா். மேலும், சுற்றுப்புறச் சூழலும் கேள்விக்குள்ளானது.

எனவே, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அவா்களுக்கு குறிப்பிட்ட பகுதியில் தனி இடம் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கீடு செய்ய நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடற்கரைச் சாலை நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரையடுத்து மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரிலும், நகராட்சி ஆணையா் அறிவுரையின்படியும் அய்யன் திருவள்ளுவா் சாலை முதல் சிலுவை நகா் வரையுள்ள நடைபாதை பகுதியில் ஆக்கிரமிப்புகள் கண்டறியபட்டு அகற்றப்பட்டது.

கன்னியாகுமரி காவல் ஆய்வாளா் பாரத் லிங்கம், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் ஷேக் அப்துல்காதா், நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் பிரதீஷ் ஆகியோா் தலைமையில் நகராட்சி ஊழியா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். மேலும் இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது வழக்குகள் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.