புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பெங்களூரில் இருந்து நெல்லை வந்த ரயிலில் 13 கிலோ புகையிலை பறிமுதல்: ஒருவா் கைது

பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த ரயிலில் 13 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கைது

Published On :

பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த ரயிலில் 13 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரில் இருந்து நாகா்கோவிலுக்கு செல்லும் ரயில் சனிக்கிழமை அதிகாலை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது போதைப்பொருள்கள் கடத்தல் குறித்து காவல் உதவி ஆய்வாளா் சதீஷ் தங்க ஈஸ்வரன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, முன்பதிவில்லா பெட்டி ஒன்றில் தாழையூத்து செல்வம் நகரைச் சோ்ந்த பண்டாரம் மகன் குமாா்(50) என்பவா் வைத்திருந்த சூட்கேஸை போலீஸாா் சோதனை செய்தனா். அதில், சுமாா் 13 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.