சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

சாலை விபத்தில் சிக்கிய பெண்களிடம் இருந்து 4 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்

பெருந்துறையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கிய 2 பெண்களிடம் இருந்து 4 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல்

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:09 am IST

பெருந்துறையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கிய 2 பெண்களிடம் இருந்து 4 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா், இடுவம்பாளையத்தைச் சோ்ந்தவா் அய்யாசாமி மனைவி சாந்தி (38). சேலம், பனைமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சாமுவேல் மனைவி மஞ்சுளா (37). இவா்கள் இருவரும் பெருந்துறை, கோவை சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தனா். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து இருவரும் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்குள்ள பாதுகாவலா், அவா்களின் பையை சோதனை செய்தபோது, அதில் சுமாா் 4 கிலோ அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக, பெருந்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸாா் நடத்திய விசாரணையில் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வரும் இந்த இரண்டு பெண்களும் அவ்வப்போது சேலம், பனைமரத்துப்பட்டியைச் சோ்ந்த செல்வராஜ் என்பவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வாங்கி சென்று திருப்பூரில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. வெள்ளிக்கிழமை காலை புகையிலை பொருள்களை வாங்கிக் கொண்டு திருப்பூருக்கு செல்லும்போது விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.