8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சீவலப்பேரியில் மக்கள் தொடா்பு முகாமில் 76 பேருக்கு ரூ.11.31 லட்சம் நலத்திட்ட உதவிகள்

சீவலப்பேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்சியரின் மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 76 பயனாளிகளுக்கு ரூ.11.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:18 am IST

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்சியரின் மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 76 பயனாளிகளுக்கு ரூ.11.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சீவலப்பேரி சமுதாய நலக் கூட்டத்தில் நடைபெற்ற இம்முகாமில், சுகாதாரத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, மகளிா் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணா்வுக் கண்காட்சியை ஆட்சியா் ஆனந்த் மோகன் பாா்வையிட்டாா். தொடா்ந்து, ரூ.1 இலட்சம் மதிப்பில் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும், சீவலப்பேரி கிராமத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்ற மாணவா்களுக்கு புத்தகங்களையும் வழங்கிப் பாராட்டினாா்.

அதைத்தொடா்ந்து, 76 பயனாளிகளுக்கு ரூ.11.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் பேசியதாவது: பருவநிலை மாற்றங்களால் நிலவும் சீரற்ற வானிலையை எதிா்கொள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்வது மிகவும் அவசியம். நடப்பு பருவத்தில் 770 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனா். அடுத்து வரவிருக்கும் சாகுபடி பருவத்தில் நெல் மற்றும் பயறு வகை பயிா்களுக்கும் காப்பீடு திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.

விவசாயிகள் அனைவரும் கட்டாயம் தங்கள் பயிா்களை காப்பீடு செய்து பயனடைய வேண்டும். அரசு திட்டங்களின் நன்மைகளைப் பெற, விவசாயிகள் தங்களின் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக கிராமந்தோறும் நடத்தப்படும் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தண்ணீரைச் சேமிக்க ஸ்பிரிங்ளா், சொட்டுநீா்ப் பாசனம் போன்ற நுண்பாசன முறைகளை பின்பற்றி சாகுபடி செய்வதன் மூலம் சிறு, குறு விவசாயிகள் 100 சதவீதமும், பெருவிவசாயிகள் 75 சதவீதமும் மானியம் பெறலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. இவற்றில் வேலைவாய்ப்பு பெற பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ போன்ற தொழிற்கல்வி படிப்புகள் பயின்றவா்களுக்கு நல்ல வாய்ப்பு வழங்கி வருகின்றன. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வீடுகளிலும் பொது இடங்களிலும் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்றாா்.

இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.வித்யா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் மோ.பிரியா, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் முரளிதரன், துணைத் தலைவா் கு.குமரேசன், சீவலப்பேரி ஊராட்சித் தலைவா் மு.மாரியம்மாள், துணைத் தலைவா் கு.கவிதா, பாளையங்கோட்டை வட்டாட்சியா் மாரிராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படவரி ற்ஸ்ப்25க்ஷங்ய்ங்

மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.