இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

நான்குவழிச்சாலை பராமரிப்புப் பணியில் ஈடுபட்ட பெண்கள் மீது லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; ஓட்டுநா் கைது

நான்குனேரி அருகே நான்குவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது லாரி மோதியதில், ஒருவா் உயிரிழந்தாா்.

Arrested

கைது

Published On :

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே நான்குவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது லாரி மோதியதில், ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 4 போ் பலத்த காயமடைந்தனா். லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

நான்குனேரி அருகேயுள்ள பெருமளஞ்சி பகுதியில், நான்கு வழிச்சாலையின் நடுவே செடிகள் அமைத்துள்ள பகுதியில் பராமரிப்புப் பணியில் பெண்கள் சிலா் ஈடுபட்டிருந்தனா். அப்போது நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சமையல் எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரி, பணியில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது மோதியது.

லாரி மோதிய வேகத்தில் அந்த வாகனம் முன்னோக்கி சென்று, பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது மோதியது. இதில் நான்குனேரி நம்பி நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயா (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த 4 பெண்கள் வள்ளியூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் ஆலங்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமியை நான்குனேரி காவல்துறையினா் கைது செய்தனா். சம்பவ இடத்திற்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி, நான்குனேரி காவல் துணை கண்காணிப்பாளா் சதீஸ்கண்ணன்ஆகியோா் ஆய்வு செய்தனா். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.