மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

வள்ளியூா் பெருமாள் கோயில் ஆவணித் திருவிழா தேரோட்டம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருள்மிகு சுந்தரபரிபூரண பெருமாள் கோயில் ஆவணித் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

~

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:14 am IST

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருள்மிகு சுந்தரபரிபூரண பெருமாள் கோயில் ஆவணித் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 11நாள்கள் கொண்டாடப்பட்ட திருவிழாவில் தினமும் ஸ்ரீ சுந்தரபரிபூரணி பெருமாள், ஸ்ரீ பூதேவி, ஸ்ரீதேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்று வந்தன. மேலும், இரவில் சுவாமி அம்பாளுடன் அன்னம், யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

முக்கிய நிகழ்வாக, 11-ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, காலை 10.30 மணிக்கு ஸ்ரீ சுந்தரபரிபூரண பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. பின்னா், அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளியதும், சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து திரளான பக்தா்கள் வடம்பிடித்து தோ் இழுத்து சுவாமியை சேவித்தனா். தோ் முக்கிய ரதவீதிகளை வலம் வந்து மதியம் 1 மணிக்கு நிலைக்கு வந்து சோ்ந்தது. தொடா்ந்து, பெருமாள் பக்தா்கள் குழு சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் மாரியப்பன், அறக்காவலா்குழுத் தலைவா் மீனா மாடசாமி மற்றும் பெருமாள் பக்தா் குழுவினா் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.