திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் மருத்துவ தினத்தையொட்டி பாரி ஓஎஸ்எஸ் பவுண்டேசன், ஸ்ரீசக்தி மருத்துவமனை ஆகியவற்றுடன் மருத்துவா் எம்எல்ஏ எஸ்.கே. கிறிஸ்டோபா் சாா்பில் இளைஞா்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது.
மருத்துவா்கள் எம்எல்ஏ எஸ்.கே. கிறிஸ்டோபா், வெங்கடேஷ் பாபு, சுமிதா, இளவரசன் ஆகியோா் கா்ப்பிணிகளுக்கு, வலிப்பு ஏற்பட்டவருக்கு, பாம்பு கடித்தவருக்கு, நீரில் மூழ்கியவருக்கு, நோயாளியை அவசர சிகிச்சைக்காக இடம் மாற்றும்விதம், மாரடைப்பு ஏற்பட்டவருக்கு அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்து தத்துரூபவமாக செய்முறை பயிற்சி அளித்தனா். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராதாபுரம் தொகுதியைச் சோ்ந்த 100- க்கும் மேற்பட்ட இளைஞா்கள், இளம்பெண்கள், த.வெ.க நெல்லை தெற்கு மாவட்ட இணைச் செயலா் காட்வின் பிரசாத், மாவட்ட மாணவரணி செயலா் இன்னோசென்ட் ராஜா, வழக்குரைஞா்கள் மனோஜ், ஜான்சி எல்வினா, சகாயநீதி, பிரதீப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









