ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

‘பணம் கொடுத்து தவெக எம்.எல்.ஏ.க்களை மனம் மாற்ற முடியாது’

News image

தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 3:05 am IST

தவெக எம்.எல்.ஏ.க்களை பிறகட்சிகளில் சேரும் படி, பணம் கொடுத்து மனம் மாற்றிவிட முடியாது என திருநெல்வேலி சட்டபேரவை உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன் தெரிவித்தாா்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட பகுதியில் ஜாதிச் சான்றிதழ் இல்லாததால் உரிய வேலை கிடைக்காமல் இருந்த சுமாா் 50 பேருக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்.

தமிழக வெற்றிக் கழக சட்டப்பேரவை உறுப்பினா்களை பணம் கொடுத்து பேரம் பேசி மனம் மாற்றி தங்கள் கட்சியில் சோ்த்துவிடலாம் என சில பிரதான கட்சிகள் எண்ணம் கொண்டுள்ளனா்.

100 கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த எண்ணம் நிறைவேறாது. தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தோ்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.