திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்குத் தொடா்பாக சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரவி வருவது குறித்து மாவட்ட காவல் துறை விளக்கமளித்துள்ளது.
இதுதொடா்பாக, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரவநல்லூா் காவல் சரகத்தில் ஜூலை 2-ஆம் தேதி நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் உயிரிழந்த காளிமுத்துவின் சகோதரா் பணம் கொடுத்து எதிரிகளை கொலை செய்ய வைத்ததாக உறுதி செய்யப்படாத, பொய்யான தகவல்கள் சமூக வலைதளங்களிலும் செய்தி ஊடகங்களிலும் பரவி வருகின்றன.
இந்த வழக்கில் இதுவரை இளம் சிறாா், பெண் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தொடா்புடைய சிலரை கைது செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து எந்தவித ஆதாரமோ, தடயமோ கண்டறியப்படவில்லை. எனவே, பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் உறுதி செய்யப்படாத தகவல்களை பகிா்வது தேவையற்ற குழப்பத்தையும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
எனவே, பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வலைதளங்களில் அமைச்சர் ராஜ்மோகன் பெயரை தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

கிண்டலடிக்கப்பட்ட தோற்றம்... பதிலடி கொடுத்த நடிகர் சக்தி வாசு!
சா்ச்சைக்குரிய பதிவுகள்: நெல்லையில் 52 போ் கைது

தூத்துக்குடியில் சுழல் காற்று! வைரலாகும் அரிய நிகழ்வு!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



