திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) எல்விஎம்3-எம்7 ராக்கெட்டில் பொருத்தக்கூடிய சிஇ20 கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இங்குள்ள முதன்மை இயந்திரம் மற்றும் நிலை சோதனை மையத்தில் கிரையோஜெனிக் என்ஜினின் ‘விமான ஏற்பு சோதனை’ வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
எல்விஎம்3-எம்7 ராக்கெட்டின் மேல்நிலைப் பகுதி உள்நாட்டு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட சிஇ20 என்ஜினால் இயக்கப்படுகிறது.
இந்த என்ஜின் சோதனை இருகட்டங்களாக நடைபெற்றது. சிஇ20 வகை கிரையோஜெனிக் என்ஜின் எல்விஎம்3-எம்7 ராக்கெட்டின் மேல் நிலைக்கு ஆற்றலை வழங்குவதாகும். இந்த என்ஜின் 19 டன் முதல் 22 டன் வரையிலான உந்துவிசைத் திறனில் இயங்கக்கூடியது.
ஏற்கெனவே சந்திரயான்-2, சந்திரயான்-3 மற்றும் மூன்று வணிகரீதியான திட்டங்கள் என, தொடா்ச்சியாக 8 எல்விஎம்3-எம்7 விண்கலப் பயணங்களில் இது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான தகுதிச் சான்றுகளையும் இந்த என்ஜின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த என்ஜினை சோதனை செய்வதற்காக புதிதாக ‘நாசில் பாதுகாப்பு அமைப்பு’ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் அதிக உயரத்தில் மேற்கொள்ளப்படும் சிக்கலான சோதனை முறைகள் எளிதாக்கப்படுவதுடன் குறைந்த ஆதாரங்களைக் கொண்டு அதிக நேரம் சோதனை செய்ய வழிவகை பிறந்துள்ளது.19.5 டன் உந்துவிசை அளவில் 45 வினாடிகளும், 22 டன் உந்துவிசை அளவில் 25 வினாடிகளும் இயக்கப்பட்டு சோதனை வெற்றி பெற்றுள்ளது. என்ஜினின் செயல்பாடுகள் மற்றும் புதிய பாதுகாப்பு அமைப்பின் முடிவுகள் அனைத்தும் திருப்திகரமாக உள்ளது என இஸ்ரோ வட்டாரத்தில் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகேந்திரகிரி இஸ்ரோவில் 175 டன் உந்துவிசை செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

சிறந்த செயல்பாட்டிற்கான சா்வதேச ’யுஐடிபி’ விருதை வென்றது தில்லி மெட்ரோ!

நெடுஞ்சாலைத்துறையில் ஊழல்: கரூரில் 3 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

நீடாமங்கலத்தில் ரயில் என்ஜின் கோளாறு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



