நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

மகேந்திரகிரி இஸ்ரோவில் 175 டன் உந்துவிசை செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 175 டன் உந்துவிசை திறனுடைய செமி-கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

News image

காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோவில் நடைபெற்ற 175 டன் உந்துவிசை திறனுடைய செமி-கிரையோஜெனிக் என்ஜின் சோதனை

Updated On :1 ஜூலை 2026, 4:31 am IST

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 175 டன் உந்துவிசை திறனுடைய செமி-கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

இஸ்ரோ மையத்தில் செயற்கைகோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் ராக்கெட்டுகளில் பொருத்தக்கூடிய பல்வேறு திறனுடைய கிரையோஜெனிக் என்ஜின் ஒவ்வொரு வெப்ப சோதனைகளிலும் (ஹாட் டெஸ்ட்), அதன் உந்துவிசைத் திறனை அதிகரித்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதற்கு முன்னா் 47 சதவீதம் (94 டன் திறன்) சோதனையும் அதன் பின்னா் 60 சதவீதம் (120 டன் திறன்) உந்து சோதனை வெற்றிகமாக நடந்து முடிந்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக முதன் முறையாக 88 சதவீதம் உந்துவிசை திறனான 175 டன் திறனுடையை செமி-கிரையோஜெனிக் என்ஜின் ஹாட் டெஸ்ட் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை வெற்றிகரமாக திட்டமிட்டபடி துல்லியமாக நடந்து முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள்,

அடுத்த கட்டமாக 100 சதவீதம் உந்துவிசை திறனுடைய 200 டன் உந்துவிசை திறன் கொண்ட இஞ்சின் சோதனையை மேற்கொள்ள நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றனா்.

மேலும், எல்.வி.எம்.3 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் எல்110 கோா் ஸ்டேஜுக்கு மாற்றாக 2,000 கிலோ நியூட்டன் திறன் கொண்ட எஸ்இ 2000 என்ஜின் மூலம் இயங்கும் செமி-கிரையோஜெனிக் ப்ரோபல்ஷன் ஸ்டேஜ் (எஸ்சி120) உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த அமைப்பில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நச்சுத்தன்மையற்ற திரவ ஆக்ஸிஜன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெயான இஸ்ரோசின் ஆகியவை எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் எல்.வி.எம்.3 ராக்கெட்டின் செயல்திறன் மற்றும் விண்வெளிக்கு சுமந்து செல்லும் பயன்சுமை திறன் கணிசமாக உயர வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.