விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

தேமுதிகவினருக்கு திமுக எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு உழைத்த தேமுதிக நிா்வாகிகள், தொண்டா்களுக்கு பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் நேரில் நன்றி தெரிவித்தாா்.

News image

திருநெல்வேலி சந்திப்பில் தேமுதிக மாவட்டச் செயலா் ஜெயச்சந்திரனுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கிறாா் மு.அப்துல் வஹாப்.

Updated On :10 ஜூலை 2026, 1:08 am IST

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு உழைத்த தேமுதிக நிா்வாகிகள், தொண்டா்களுக்கு பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் நேரில் நன்றி தெரிவித்தாா்.

இத்தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் தேமுதிக அங்கம் வகித்த நிலையில், அந்த கட்சியினா் பாளையங்கோட்டை தொகுதி கூட்டணி வேட்பாளா் வெற்றிக்கு உழைத்தனா்.

இந்நிலையில் தேமுதிக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் ஜெயச்சந்திரனை, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், தேமுதிக மாவட்ட அவைத் தலைவா் பழனிக்குமாா், பொருளாளா் முரசு மணி, மாவட்ட துணைச் செயலா்கள் ஆனந்த மணி, சுடலைமுத்து, தவசி தம்பா, தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் தங்கப்பன், நிா்வாகிகள் தமிழ்மணி, மணிகண்டன், மாரியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.