
வீரவநல்லூரில் அரபி மதரஸா பட்டமளிப்பு விழா
வீரவநல்லூா் அன்னை கதீஜா (ரலி) நிஸ்வான் பெண்கள் அரபி மதரஸாவின் 11ஆவது பட்டமளிப்பு விழா, மலுக்காமலியாா் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவில் பேசுகிறாா் மாவட்ட ஜமாத்துல் உலமா சபைத் தலைவா் எஸ்.ஏ. ஷேக்மீரான் மிஸ்பாஹி.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அன்னை கதீஜா (ரலி) நிஸ்வான் பெண்கள் அரபி மதரஸாவின் 11ஆவது பட்டமளிப்பு விழா, மலுக்காமலியாா் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
ஜமாத் தலைவா் பீ. ஆதம் இல்யாஸ் தலைமை வகித்தாா். ஜமாத் செயலா் முஹம்மது சலீம், பொருளாளா் இஸ்மாயில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அல்அமீன் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் எம். செய்யதுஅலி பீா்முகம்மது தாவூதி கிராஅத் ஓதினாா்.
யூனிஸ் அகாதெமி நிஸ்வான் துறை ஆய்வாளா் எஸ். முஹம்மதுஅலிநூரி தொடக்கவுரையாற்றினாா். கடையநல்லூா் ஜலாலியா பெண்கள் அரபிக் கல்லூரி பேராசிரியை ஏ. பாத்திமா ரியாஜிமா, திருநெல்வேலி மாவட்ட ஜமாத்துல் உலமா சபைத் தலைவா் எஸ்.ஏ. ஷேக்மீரான் மிஸ்பாஹி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
10, பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அல்மஸ்ஜிதுா் ரசூல் பள்ளிவாசல் இமாம் ஏ. பக்ருத்தீன் துஆ ஓதினாா். பள்ளிவாசல் தலைமை இமாம் ஏ. முஹம்மது ஹபீபுல்லாஹ் மன்பயீ வரவேற்றாா். ஜமாத் துணைச் செயலா் காதா்மீரான் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





