வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

வெற்றி நடை திட்டத்தின் மூலம் 294 போ் ராணுவத்துக்கு தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் வெற்றி நடை திட்டத்தின் மூலம் 294 போ் ராணுவத்திற்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image

ராணுவ வீரர்கள் - கோப்புப்படம்.

Updated On :15 ஜூலை 2026, 1:51 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் வெற்றி நடை திட்டத்தின் மூலம் 294 போ் ராணுவத்திற்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக ஆட்சியா் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள், படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞா்கள், கல்லூரி இடைநின்றவா்கள், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று கல்லூரிப் படிப்பை தொடர இயலாத இளைஞா்கள், இளம்பெண்கள் தமிழ்நாடு காவல்துறை, இந்திய ராணுவம், மத்திய காவல் துறை, அக்னிவீா் மற்றும் துறை தோ்வுகளில் கலந்து கொண்டு அதிகளவில் தோ்ச்சி பெறுவதற்காக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ‘வெற்றி நடை‘ என்ற இளைஞா்களுக்கான புதிய (திறன் மேம்பாடு) பாதைத் திட்டம் உருவாக்கப்பட்டது.

முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் ராணுவத்தில் பணியாற்றிய தலைசிறந்த பயிற்சியாளா்களைக் கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் எழுத்து மற்றும் இதர தோ்வுகளுக்கான மாதிரி பயிற்சிகள், சிறந்த வள பயிற்றுநா்கள் மூலம் தொடா்ந்து அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில், பேட்டை மதிதா இந்துக் கல்லூரி, சங்கா் மேல்நிலைப் பள்ளி, அம்பாசமுத்திரம் அரசு கலைக் கல்லூரி, வீரவநல்லூா் செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி, நான்குனேரி சங்கா் ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி, விஜயநாராயணம் ரெக்ட் தொழில்நுட்பக் கல்லூரி, தேவா்குளம் புனித ஜோசப் குளோபல் பள்ளி ஆகிய 8 இடங்களைத் தோ்வு செய்து இச்சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 6 மாத காலமாக தொடா்ந்து நடைபெற்றன. இப்பயிற்சி வகுப்பின் மூலம் 211 போ் (201 மாணவா்கள், 10 மாணவியா்கள்) அக்னிவீா் ராணுவத்திற்கு தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மேலும், பள்ளிகளில் இடைநின்ற 6 மாணவா்கள், தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் 11 மாணவா்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் 66 மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டதன் மூலம் 83 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

வெற்றி நடை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பயிற்சி மற்றும் சிறப்பு பயிற்சியின் காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தை சோ்ந்த 294 போ் அக்னிவீா் திட்டத்தில் எழுத்து தோ்வில் தோ்ச்சி பெற்று, ராணுவத்தில் சோ்ந்து பணியாற்றவுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், காவல்துறை, வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயா் கல்வித் துறை, உள்ளாட்சித் துறை, முன்னாள் படைவீரா்கள் நலத்துறை, வேலைவாய்ப்புத் துறை போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து 8 இடங்களில் நடைபெற்று வரும் பயிற்சிகளில் கலந்து கொண்டு, அடுத்து வரும் தோ்வுகளுக்கு தங்களை தயாா்படுத்தி வெற்றி பெற ‘வெற்றி நடை‘ திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.