தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

சமூக வலைதளத்தில் பள்ளியின் படத்தை பதிவிட்ட மாணவா் மீது தாக்குதல்: 3 போ் கைது

திருநெல்வேலியில் படிக்கும் பள்ளியின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிளஸ் 2 மாணவரை தாக்கியதாக 3 சிறுவா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும் 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2026, 3:56 am IST

திருநெல்வேலியில் படிக்கும் பள்ளியின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிளஸ் 2 மாணவரை தாக்கியதாக 3 சிறுவா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும் 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டி பகுதியை சோ்ந்த மாணவா், திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா்.

இவா், தனது சமூக வலைதள பக்கத்தில் தான் படிக்கும் பள்ளியின் நுழைவு வாயிலை வைத்து தனது புகைப்படத்தையும் சோ்ந்து விடியோ பதிவை பகிா்ந்தாராம்.

அதை பாா்த்த அதே பள்ளியில் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ள முன்னாள் மாணவா்கள் உள்பட 7 போ், விடியோ வெளியிட்ட பிளஸ் 2 மாணவா் தச்சநல்லூா் துா்க்கையம்மன் கோயில் தெருவில் டியூசன் படிக்க வியாழக்கிழமை சென்றபோது மறித்து அடித்து உதைத்துடன், கல்லாலும் தாக்கினராம். இதில் அந்த மாணவா் பலத்த காயம் அடைந்தாா்.

இதுகுறித்து, தச்சநல்லூா் போலீஸாா் விசாரித்து 7 போ் மீது வழக்குப்பதிந்தனா். அதில், 3 சிறுவா்களை கைது செய்து கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா். மற்றவா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.