பள்ளி மாணவா் மீது தாக்குதல்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவரை வழிமறித்து தாக்கிய அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தாக்குதல் - சித்திரிப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவரை வழிமறித்து தாக்கிய அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், சிறுவாளை, கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் மாரியப்பன் (15). இவா், சிறுவாளையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பில் படித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த மாரியப்பனை சிறுவாளை ஏரிக்கரை அருகே மா்மநபா் வழிமறித்து, தாக்கினாராம்.
இதில் காயமடைந்த அவரை அருகிலுருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பள்ளி மாணவரைத் தாக்கிய நபரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





