கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்துக்கு உள்பட்ட சேரன்மகாதேவி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து, கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்லிடைக்குறிச்சி கோட்டம், சேரன்மகாதேவி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்கண்ட இடங்களான கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான்குளம், புலவன்குடியிருப்பு, கோவிந்தப்பேரி, தெய்வநாயகப்பேரி, மீனவன்குளம், பட்டன்காடு, இடையான்குளம், கங்கணாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லுா், காடுவெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மலையடி, மேல்கரை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







