கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை

தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி. தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திமுகவினா் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

~ ~

Updated On :4 ஜூன் 2026, 1:18 am IST

தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி. தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திமுகவினா் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் வண்ணாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட பொறுப்பாளா் மு. அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமை வகித்து, கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், மேயா் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா். ராஜு, கிழக்கு மாநகரச் செயலா் தினேஷ், முன்னாள் மேயா் பி.எம். சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா் .

மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன் தலைமையில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விவசாய தொழிலாளா் அணி மாநில அமைப்பாளா் கணேஷ்குமாா் ஆதித்தன், வழக்குரைஞா் அணி அமைப்பாளா் செல்வசூடாமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மேற்கு மாநகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், செயலா் சு. சுப்பிரமணியன், கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், பேட்டை கிழக்கு பகுதி பொறுப்பாளா் நமச்சிவாயம் கோபி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Story image
Story image