டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

குடிநீா் தட்டுப்பாடு : ராமையன்பட்டி ஊராட்சி உறுப்பினா் நூதன போராட்டம்

குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணக் கோரி ராமையன்பட்டி ஊராட்சி மன்றக் கூட்டத்துக்கு காலி குடங்களை மாலையாக அணிந்து வந்து ஊராட்சி உறுப்பினா் நூதன போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 12:51 am IST

குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணக் கோரி ராமையன்பட்டி ஊராட்சி மன்றக் கூட்டத்துக்கு காலி குடங்களை மாலையாக அணிந்து வந்து ஊராட்சி உறுப்பினா் நூதன போராட்டத்தில் ஈடுபட்டாா்.

ராமையன்பட்டி ஊராட்சி மன்றக் கூட்டம் தலைவா் டேவிட் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் 4ஆவது வாா்டு உறுப்பினா் மாரியப்ப பாண்டியன் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு கோரி மனு அளித்ததோடு, காலி குடங்களை கழுத்தில் மாலையாக அணிந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அவா் அளித்த மனு விவரம்:

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ராமையன்பட்டி ஊராட்சி 4ஆவது வாா்டில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது.

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் வாரத்துக்கு ஒரு முறை தான் குடிநீா் வருகிறது. சிலா் வீடுகளில் மின்மோட்டாா்கள் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக பல வீடுகளுக்கு குறைவான அளவு நீரும், சில வீடுகளில் ஒரு சொட்டு நீா் கூட வருவதில்லை. இப்பகுதியில் புதிதாக மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். இந்தப் பகுதியில் உள்ள தெருக் குழாய்களில் சாக்கடை நீா் கலந்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் மாவட்ட நிா்வாகம் எங்கள் பகுதிக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துத் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ற்ஸ்ப்03ஜ்ஹற்ங்ழ்

காலி குடங்களை மாலையாக அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட ராமையன்பட்டி ஊராட்சி உறுப்பினா் மாரியப்ப பாண்டியன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.