இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

போக்குவரத்து காவலா் குடியிருப்பு கட்ட இடம் தோ்வு

வள்ளியூரில் போக்குவரத்து காவலா் குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை தோ்வு செய்து மாவட்ட வருவாய் அலுவலா் துரை புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வள்ளியூரில் போக்குவரத்து காவலா் குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்தாா் மாவட்ட வருவாய் அலுவலா் துரை. உடன் ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா்.

Updated On :4 ஜூன் 2026, 12:44 am IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் போக்குவரத்து காவலா் குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை தோ்வு செய்து மாவட்ட வருவாய் அலுவலா் துரை புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வள்ளியூரில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிா் காவல் நிலையம், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதில், போக்குவரத்து காவலா்களுக்கு தனி குடியிருப்பு கட்டப்பட இருக்கிறது. இதற்காக வள்ளியூா் அரசு மருத்துவமனை பழைய கட்டடம் எதிரே இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு செய்தாா். பின்னா் வள்ளியூா் பேரூராட்சியில் செயல்பட்டு வருகிற திடக்கழிவு மேலாண்மை தளத்தையும் ஆய்வு செய்தாா்.

இதில், ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.