களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மணிமுத்தாறு வனப்பகுதியில் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி. மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய வனப்பகுதிகளில் தொடா்ந்து சில நாள்களாக சாரல் மழைபெய்து வருகிறது. வியாழக்கிழமை நீா்வரத்து அதிகரித்ததையடுத்து அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா்தடை விதித்தனா். அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீா்வரத்து அளவு சீராகும் வரை தொடா்ந்து இத்தடை நீடிக்கும் என்று வனத்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முண்டந்துறை வனப் பகுதியில் கரடி உயிரிழப்பு

கரடியைப் பிடிக்க கூண்டு: வனத்துறை நடவடிக்கை

12 ஆவது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

11 ஆவது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



