சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

12 ஆவது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

News image

திங்கள்கிழமை மணிமுத்தாறு அருவியில் இருந்த நீா்வரத்து.

Updated On :16 ஜூன் 2026, 2:31 am IST

திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் தொடரும் சாரல் மழையால் மணிமுத்தாறு அருவியில், திங்கள்கிழமை 12ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

ஜூன் 1ஆம் தேதி முதல் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால், மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து கணிசமாக அதிகரித்தது. குறிப்பாக மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, ஜூன் 4ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதித்தனா். 12ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.

அருவியில் நீா்வரத்து சீராகும் வரை, இதே நிலை தொடரும் என்றும் வனத்துறையினா் தெரிவித்தனா்.