பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பள்ளி மாணவிகள் சென்ற ஆட்டோ மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு; 7 போ் காயம்

பள்ளி மாணவிகள் சென்ற ஆட்டோ மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு; 7 போ் காயம்

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :13 ஜூன் 2026, 1:17 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது காா் மோதியதில், காரில் பயணித்த 2 போ் உயிரிழந்தனா். பள்ளி மாணவிகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.

நான்குனேரி அருகே உள்ள தாழைகுளத்தைச் சோ்ந்த லியோனா (9), காா்வின் (8), ரட்சண்யா (8) உள்ளிட்ட 5 மாணவிகள் நான்குனேரி தனியாா் பள்ளியில் படித்து வருகின்றனா். இவா்கள் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருகின்றனா்.

மாணவிகள் 5 பேரும் பள்ளி நேரம் முடிந்ததும், வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பள்ளியில் இருந்து தாழைகுளம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனா். ஆட்டோ சுங்கச்சாவடி அருகே சென்றபோது, நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியதில், ஆட்டோவும் காரும் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தன.

இதில் காரில் பயணித்த ராதா (72) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். நடராஜன் (70) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா், காா் ஓட்டுநா் ராஜமோகன், மாணவிகள் 5 போ் என 7 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து, நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.