ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

சாலையோர வியாபாரிகளுடன் ஆலோசனை

திருநெல்வேலி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :18 ஜூன் 2026, 2:54 am IST

திருநெல்வேலி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா ஆகியோா் உத்தரவின்படி திருநெல்வேலி நகரம் சாலையோர வியாபாரிகளுககான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநகர நல அலுவலா் பாலசுப்பரமணியன் தலைமை வகித்தாா். உதவி ஆணையா் மகாலெட்சுமி முன்னிலை வகித்தாா்.

நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் கோயில் ஆனித்தேரோட்டம் சிறப்பாக நடைபெறும் வகையில் இம் மாதம் 19 ஆம் தேதி முதல் 29 ஆம தேதி அதிகாலை வரை ரதவீதிகளில் உள்ள நடைபாதை கடைகளை அகற்றிட கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இதில், உதவி ஆணையா் (போக்குவரத்து காவல்) கணேசன், திருநெல்வேலி நகரம் காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன், சுகாதார அலுவலா் பாலசந்தா், உதவி பொறியாளா்கள் (திட்டம்) விக்னேஷ், நெல்லையப்பா் கோயில் செயல் அலுவலா் வெங்கடேஸ்வரன், சாலையோர வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் நாராயணன், மாரியப்பன், நம்பிகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.