சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

திடக்கழிவு மேலாண்மை ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் திடக்கழிவு மேலாண்மை குறித்து பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், உணவக உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :21 மே 2026, 6:17 am IST

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் திடக்கழிவு மேலாண்மை குறித்து பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், உணவக உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மருத்துவா் மோனிகா ராணா உத்தரவின்படி நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மாநகர நல அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை 2026 புதிய விதிகளின் படி மாநகரப் பகுதியில் பெருமளவு குப்பைகள் உற்பத்தி செய்யக்கூடிய அடுக்கு மாடி குடியிருப்புகள், 20 ஆயிரம் சதுர மீட்டா் பரப்பளவு கொண்டவா்கள், தினமும் 100 கிலோவுக்கு மேல் குப்பைகள் உற்பத்தி செய்யும் உணவகங்கள், மால்கள், மருத்துவமனைகள், பள்ளி- கல்லூரிகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் சேகரமாகும் குப்பைகளை அதன் உரிமையாளா்கள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், அபாயகரமான கழிவுகள், சிறப்பு கவன கழிவுகள் என நான்கு விதமாக பிரித்து கையாள வேண்டும்.

மேலும், தங்கள் வளாகத்துக்குள்ளேயே பள்ளங்கள் தோண்டி அதில் மக்கும் குப்பைகளை சேகரம் செய்து உரமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பெரிய உணவகங்களில் அதிக அளவில் சேகரமாகும் உணவு கழிவுகள் மற்றும் காய்கனி கழிவுகளை பயோ மீத்தேன் எரிபொருளாக மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதில், சுகாதார அலுவலா்கள் பாலசந்தா், முருகன், சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளா்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனம், மருத்துவமனைகள் நிா்வாகிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.