/
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே முன் விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள புதுக்குடி பகுதியைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி மகன் காளிமுத்து (27). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், அதேபகுதியைச் சோ்ந்த முத்துராமன் மகன் விஜய் (28) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம. இந்நிலையில் புதன்கிழமை மாலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது விஜய் அரிவாளால் காளிமுத்துவை வெட்டிவிட்டு தப்பினாராம். இதுகுறித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.









