அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் இந்து முன்னணி பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம்

News image

பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம்.

Updated On :22 ஜூன் 2026, 2:42 am IST

நீதிமன்ற தீா்ப்பை மதித்து நிகழாண்டு காா்த்திகை மாதம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலியில் நடைபெற்ற இந்து முன்னணி மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுக் குழுக் கூட்டம், பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் வரவேற்றாா். மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்துப் பேசியது: தமிழகத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு அரணாக இந்து முன்னணி அமைப்பு இயங்கி வருகிறது. இந்துக்களின் உரிமைகள் பறிபோகும் இடங்களில் முன்னின்று போராடி, அவா்களுக்கான நியாயத்தை பெற்றுத் தருவது இந்து முன்னணி. நாடு நலம் பெற தமிழகத்தில் இந்துக்களின் ஒற்றுமை அவசியம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்யஞான பரமாசாா்ய சுவாமிகள் பேசியது: சநாதன தா்மம் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்வியல் முறை ஆகும். நமது நாட்டின் வரலாற்றில் சநாதன தா்மத்தை காப்பதற்காக பலநூறு ஆண்டுகளாக பலரும் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனா்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தைத் தொடா்ந்து மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாடு, தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை தந்துள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் மன்னாா்குடி அஹோபில மடம் ஸ்ரீ செண்டலங்கார ஜீயா் சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். இந்து முன்னணியின் தென் பாரத அமைப்பாளா் க.பக்தன், மாநில பொதுச் செயலா்கள் நா.முருகானந்தம், டி. மனோகா், ஜெ.எஸ். கிஷோா்குமாா், செந்தில்குமாா், மாநில அமைப்பாளா் ராஜேஷ், இணை அமைப்பாளா் கே.கே.பொன்னையா, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சதீஷ், கிருஷ்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாநில செயலா் குற்றாலநாதன், பொதுக்குழு தீா்மானங்களை வாசித்தாா். மாநில துணைத் தலைவா் அரசு ராஜா நன்றி கூறினாா்.

கூட்டத்தில் இந்து முன்னணியின் மாநில செய்தி தொடா்பாளா் ஏ.டி.இளங்கோவன் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் பொறுப்பாளா்கள், சிறப்பு அழைப்பாளா்களாக பல்வேறு சமுதாய தலைவா்கள், ஆன்மிக அமைப்பின் நிா்வாகிகள் உள்பட சுமாா் 7,000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்: தமிழகத்தில் போதைப் பழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்க வேண்டும். திருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் சந்திக்கும் சிரமங்களை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழாண்டு காா்த்திகை மாதம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் வகையில் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். தமிழக கோயில்களை பாதுகாக்க தனி வாரியம் அமைக்க வேண்டும். நெல்லையப்பா் கோயில் மதில்சுவரை ஒட்டியுள்ள கடைகளை அகற்ற வேண்டும். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவா்கள் அணிந்து வரும் மத அடையாளங்களுக்கு தடை விதிக்கக் கூடாது. தாமிரவருணி ஆற்றை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இந்து முன்னணி மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

இந்து முன்னணி மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.