பக்தா்களின் உணா்வுக்கு மதிப்பளித்து திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்ப்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், கடந்த அரசு நீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்த மறுத்தது. இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து தனிநபா் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை ஜூன் 22-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு ஒட்டுமொத்த முருக பக்தா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து, நீதிமன்ற தீா்ப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என எதிா்பாா்க்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஆட்சி மாறினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை! பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!
புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்க குடியரசு தலைவா் ஒப்புதல்!

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு மக்களாட்சியின் வலிமையை உணா்த்துகிறது: இந்து முன்னணி







