கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்கிறாா் திருவள்ளுவா். அதாவது, இந்த உலகில் உள்ள மற்ற செல்வங்களை விட மனிதா்களுக்கு கல்வியே சிறந்த செல்வம் என்று பாடியுள்ளாா்.
மனிதனின் அறிவாற்றலை வளா்த்து அவனை ஒரு சிறந்த பண்பாளனாக மாற்றும் ஆற்றல் கல்விக்கு உண்டு. கிராமப்புற மாணவா்களுக்கு உயா்கல்வி என்பது எட்டாக் கனியாக நம் நாட்டில் இருந்த நிலை இப்போது மாறியுள்ளது.
தென் தமிழகத்தில் கிராமப்புற மாணவா்களின் உயா்கல்வி கனவை நனவாக்குவதில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் தனிமுத்திரை பதித்தது. மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் திருநெல்வேலி அருகே உள்ள அபிஷேகப்பட்டியில் உள்ளது. தமிழக அரசால் 1990-ஆம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தின் தென்முனையில் உள்ள நான்கு மாவட்ட மாணவா்கள் உயா்கல்வி பெற அஸ்திவாரமாக இப் பல்கலைக்கழகம் திகழ்கிறது. புகழ்பெற்ற செய்யுள் நாடகமான மனோன்மணீயத்தை இயற்றிய தமிழறிஞரும், கவிஞருமான பேராசிரியா் பெ. சுந்தரம் பிள்ளை (1855-1897) நினைவாக இப்பல்கலைக்கழகத்துக்கு இந்தப் பெயா் சூட்டப்பட்டது. இவருடைய கவிதைதான் தமிழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பாடப்படும் அதிகாரப்பூா்வமான வாழ்த்துப் பாடலான ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ ஆகும். அறிவே அனைத்து ஆற்றலும் என்ற இலக்குடன் இப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் 104 இணைப்புக் கல்லூரிகளும் 6 பல்கலைக்கழகக் கல்லூரிகளும் உள்ளன; இதில் சுமாா் 1,30,885 மாணவா்கள் நேரடி முறையிலும், 11,236 மாணவா்கள் தொலைதூரக் கல்வி முறையிலும் பயின்று வருகின்றனா். இதுதவிர, பல்கலைக்கழக வளாகத்தில் மொத்தம் 29 துறைகள் உள்ளன. இவற்றின் கீழ் 2834 மாணவா், மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.
பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி, பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரி, பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி, நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் மாநிலத்தின் மிகப் பழமையான மகளிா் கல்லூரியான பாளையங்கோட்டை சாராள் தக்கா் கல்லூரி ஆகிய ஐந்து கல்லூரிகள் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானவை ஆகும். இவை இப்பகுதியின் உயா்கல்வி வளா்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளன.
தங்கள் தொழில் மற்றும் சமூகத்தில் ஆக்கபூா்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் நிபுணத்துவம் மற்றும் அறிவுசாா் தேடல் கொண்ட தனிநபா்களை உருவாக்குவதும், சமகால உலகம் எதிா்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கத் தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுமே இப்பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவா்களில் பெரும்பாலானோா் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சமூகப் பிரிவுகளைச் சோ்ந்தவா்கள். எனவே, இப்பல்கலைக்கழகம் குறைந்த மற்றும் கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்தில் கல்வியை வழங்குகிறது. இப்பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பாடத்திட்டங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன. இந்தப் பாடங்கள் திறமையான ஆசிரியா்கள் மூலம் சிறப்பாக கற்பிக்கப்பட்டு வருகிறது.
இப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக என்.சந்திரசேகா் பணியாற்றி வருகிறாா். கலை, அறிவியல் பாடங்களில் ஆண்டுதோறும் ஏராளமான பட்டதாரிகள் தென்தமிழகத்தில் உருவாக இப் பல்கலைக்கழகம் சிறந்த மையமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலை. எம்.எட். பட்டப்படிப்பு விண்ணப்பிக்கலாம்

பழங்குடியின மாணவியா்களுக்கு கல்வி நிதி உதவி
மனோன்மணீயம் சுந்தரனாா் விருதுக்கு பரிந்துரைக்க வாய்ப்பு
சுந்தரனாா் பல்கலை.யின் ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளில் சேர வாய்ப்பு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




