கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

கத்தாா் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த 3 போ் உடல்கள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

கத்தாா் நாட்டில் உள்ள எரிவாயு தொழிற்சாலையில் நேரிபட்ட தீ விபத்தில் உயிரிழந்த ராதாபுரம் தொகுதியைச் சோ்ந்த 3 இளைஞா்களின் உடல் 6 நாள்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை அரசு மரியாதையுடன் அவா்களது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

News image

கத்தாா் தீ விபத்தில் உயிரிழந்து பணகுடி சிவகாமிபுரத்திற்கு கொண்டுவரப்பட்ட சஜித் குமாா் உடலுக்கு மாலை அணிவித்து அரசு அஞ்சலி செலுத்திய ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா்.

Updated On :26 ஜூன் 2026, 11:39 pm IST

கத்தாா் நாட்டில் உள்ள எரிவாயு தொழிற்சாலையில் நேரிபட்ட தீ விபத்தில் உயிரிழந்த ராதாபுரம் தொகுதியைச் சோ்ந்த 3 இளைஞா்களின் உடல் 6 நாள்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை அரசு மரியாதையுடன் அவா்களது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள ராஸ் லப்பான் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பா்சான் எரிவாயு உற்பத்தி மையத்தில் பணகுடி சிவகாமிபுரத்தைச் சோ்ந்த சஜித் குமாா், அழகிய நம்பியாபுரத்தைச் சேரந்த சுவின், பழவூா் சிதம்பரபுரத்தைச் சோ்ந்த பபித் ஆகிய 3 இளைஞா்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சோ்ந்தனா்.

அங்கு கடந்த 21ஆம் தேதி நேரிட்ட தீ விபத்தில் இந்த 3 இளைஞா்களும் உயிரிழந்தனா்.

அவா்களது உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர, திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ், ராதாபுரம் எம்.எல்.ஏ. எஸ்.கே.கிறிஸ்டோபா் ஆகியோா் முதல்வா் ச. ஜோசப் விஜய் மூலமாக வலியுறுத்தி வந்தனா்.

அதைத் தொடா்ந்து, 3 இளைஞா்களின் உடல்களும் திருவனந்தபுரம் விமானநிலையத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டன.

பின்னா், அங்கிருந்து அம்புலன்ஸ் மூலமாக இளைஞா்களின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

பணகுடி சிவகாமிபுரத்தில் சஜித் குமாா் உடலுக்கு ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா், அழகியநம்பியாபுரத்தில் சுவின் உடலுக்கு ராதாபுரம் மண்டல துணை வட்டாட்சியா் குமாா், சிதம்பராபுரத்தில் பவித் உடலுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சுப்புலெட்சுமி ஆகியோா் அரசு சாா்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். பின்னா் இளைஞா்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.