திருச்சியில் சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், பூலாங்குடி கீழக்குறிச்சியைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (55), துவரங்குறிச்சியில் காவல் உதவி ஆய்வாளா். திருவெறும்பூா் பெல் பகுதியில் குடியிருந்த தட்சிணாமூா்த்தி செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு பைக்கில் திரும்புகையில் பெல் தொழிற்சாலை அருகே எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.
இதையடுத்து இவரது இறுதிச் சடங்கு சொந்த கிராமமான கீழக்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்றது. இவரது உடலுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ், திருவெறும்பூா் ஏஎஸ்பி அரவிந்த் பனாவத், காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் மற்றும் உறவினா்கள் மரியாதை செலுத்தினா். இதையடுத்து, இவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: 5 போ் மறுவாழ்வு

அரசு மரியாதையுடன் எழுத்தாளா் பூமணி உடல் நல்லடக்கம்
பழம்பெரும் பாடகி எஸ். ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

இயக்குநா் பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



