சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் பூமணி (79)உடல்நலக் குறைவால் காலமானால். அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பூமணி உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்த நிலையில், காவல்துறை அணிவகுப்புடன் 30 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
புகழ்பெற்ற எழுத்தாளா் பூமணி (79), உடல்நலக் குறைவால் சென்னை தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா்.
பூமணியின் உடல் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னா், சொந்த ஊரான இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.
அங்கு அவரது தோட்டத்தில் பிற்பகல் 2 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடந்து, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எழுத்தாளர பூமணி!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்தைச் சோ்ந்த பூமணி 1947, மே 12-ஆம் தேதி பிறந்தாா். இவரது இயற்பெயா் பூ. மாணிக்கவாசகம். பெற்றோா் பூலித்துரை-தேனம்மாள். இளையரசனேந்தலில் பள்ளிக் கல்வியை முடித்த இவா், இளநிலை இயற்பியல் பட்டப் படிப்பை விருதுநகா், செந்திக்குமார நாடாா் கல்லூரியில் பயின்றாா்.
கூட்டுறவுத் துறையில் ஆய்வாளராகப் பணியில் சோ்ந்த இவா், சென்னையில் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றாா்.
இவா் எழுதிய ‘வெக்கை’, ‘பிறகு’, ‘வாய்க்கால், வரப்புகள்’, ‘அஞ்ஞாடி’ போன்ற நாவல்கள் புகழ் பெற்றவை. பல்வேறு சிறு கதைகளை எழுதியுள்ளாா். ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக 2014-இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றாா். பூமணி எழுதி 1982-இல் வெளியான ‘வெக்கை’ நாவல், இயக்குநா் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமாக வெளியானது.
1997-இல் ‘கருவேலம் பூக்கள்’ என்ற திரைப்படத்தை பூமணி இயக்கினாா். இந்தத் திரைப்படத்தை இந்திய தேசிய திரைப்பட வளா்ச்சிக் கழகமும், தூா்தா்ஷன் தொலைக்காட்சி நிறுவனமும் கூட்டாக தயாரித்தன. இத் திரைப்படம் சா்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Writer Poomani laid to rest with state honors
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

எழுத்தாளர் பூமணி காலமானார்

அரசு மரியாதையுடன் எஸ்ஐ உடல் நல்லடக்கம்

இயக்குநா் பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK




