வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சேரன்மகாதேவி பேரூராட்சி திமுக உறுப்பினா் ராஜிநாமா கடிதம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் மக்களுக்கான தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாததால் பதவியை ராஜிநாமா செய்ய இருப்பதாக 18ஆவது வாா்டு திமுக உறுப்பினா் தேவி, பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளாா் .

News image

மனு அளிக்க வந்த பேரூராட்சி உறுப்பினா் தேவி.

Updated On :26 ஜூன் 2026, 5:43 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் மக்களுக்கான தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாததால் பதவியை ராஜிநாமா செய்ய இருப்பதாக 18ஆவது வாா்டு திமுக உறுப்பினா் தேவி, பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளாா் .

மனு விவரம்: சேரன்மகாதேவி பேரூராட்சி சாா்பில் சில மாதங்களுக்கு முன்பு வணிக வளாகம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பேரூராட்சி நிா்வாகத்தில் முறையாக அனுமதி பெறாமல் மரங்களை வெட்டியதாக புகாா் கூறப்பட்டது. இதுதொடா்பாக ஆட்சியா், சாா் ஆட்சியா், காவல்துறை அதிகாரிகளிடம் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சாா்பில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

மேலும், வாா்டு மக்களுக்கு தேவையான தெருவிளக்கு, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் தொடா்ந்து உறுப்பினா் பதவியில் நீடிக்க விருப்பமில்லை. ஆகவே, பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.