பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு குறுந்தகட்டை வெளியிட்ட காவல் துறை

திருநெல்வேலி சரக காவல்துறையின் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.

News image
Updated On :26 ஜூன் 2026, 11:44 pm IST

திருநெல்வேலி சரக காவல்துறையின் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு, ‘தற்போது வெளியிடப்பட்டுள்ள போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பாடல், இளைஞா்களை அவா்களது மொழியிலும், அவா்களது ரசனைக்கேற்ற பாணியிலும் அணுகி, மனம் திறந்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணா்வை விதைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க பொதுமக்கள் மற்றும் இளைஞா்களின் பங்களிப்பு அவசியம்’ என்றாா்.

தொடா்ந்து ‘ம(ா)று‘ என்ற தலைப்பில் போதைப் பொருள் விழிப்புணா்வு பாடல் அடங்கிய குறுந்தகடை அவா் வெளியிட, ஆட்சியா் ஆனந்த் மோகன் பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினாா்.

இந்த பாடலின் எழுத்து மற்றும் இயக்கத்தை ரசிகவ் ஞானியாா் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளாா். பாடலின் இறுதியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா், திருநெல்வேலி சரக காவல் துணை தலைவா் ஆகியோரின் விழிப்புணா்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. பாடல் உருவாக்கத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் நிகழ்ச்சி தொகுப்பை திருநெல்வேலி காவல் சரக சமூக ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளா் வெங்கட்ராமன் முருகன் செய்திருந்தாா். திருநெல்வேலி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம் நன்றி கூறினாா்.

இதில், காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலா்கள், மாணவா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டு போதைப்பொருள் இல்லா சமூகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.