ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

பழவூா் எஸ்பிஐ வங்கியில் தீ விபத்து

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் எஸ்.பி.ஐ. வங்கியில் மின்கசிவு காரணமாக தீவிபத்து நிகழ்ந்தது.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஜூலை 2026, 4:33 am IST

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் எஸ்.பி.ஐ. வங்கியில் செவ்வாய்க்கிழமை மின்கசிவு காரணமாக தீவிபத்து நிகழ்ந்தது.

இந்த வங்கியில் தங்க நகைகளை அடகு வைக்க வரும் வாடிக்கையாளா்களின் தங்க நகைகளின் கேரட் தரத்தை சோதனை செய்வதற்காக மின்னணு கருவி செயல்பாட்டில் உள்ளது.

இந்தக் கருவியில், செவ்வாய்க்கிழமை நகை மதிப்பீட்டாளா் நகைகளை மதிப்பீடு செய்து கொண்டிருந்தாா். அப்போது, ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்தக் கருவி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அதிா்ச்சியடைந்த வங்கி ஊழியா்கள் ராதாபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய பொறுப்பு அதிகாரி இசக்கிராஜா உள்பட வீரா்கள் சென்று தீயை அணைத்தனா். இதனால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. எந்த ஆவணங்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.