மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

வடமாநில தொழிலாளி உடல் ஒப்படைப்பு: அரசு உதவ கோரிக்கை

நான்குனேரி இரட்டைக் கொலை சம்பவத்தில் உயிரிழந்த வடமாநிலத் தொழிலாளியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :4 மார்ச் 2026, 7:15 pm

நான்குனேரி இரட்டைக் கொலை சம்பவத்தில் உயிரிழந்த வடமாநிலத் தொழிலாளியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. வறுமையின் பிடியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு அரசு உதவ வேண்டும் என சக தொழிலாளா்கள் கண்ணீா் மல்க கோரிக்கை விடுத்தனா்.

ஒடிசா மாநிலம் பாலங்கீா் பகுதியைச் சோ்ந்தவா் தீனபந்து கட்டா மகன் திரிநாத் கட்டா(50). சில ஆண்டுகளுக்கு முன்னா் தனது மனைவி மற்றும் பெண் குழந்தைகளுடன் பிழைப்புத்தேடி தமிழகம் வந்த இவா், நான்குனேரி பெரும்பத்து பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள செங்கல்சூளையில் வேலை பாா்த்து வந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி இரவு மா்மநபா்களால் கொலை செய்யப்பட்டாா். அவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்குப் பின் புதன்கிழமை காலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னா் பாளைங்கோட்டை மண்டலம் வி.எம்.சத்திரத்தில் உள்ள மாநகராட்சி எரிவாயு தகன மேடையில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.

அரசு உதவ வேண்டும்: திரிநாத் கட்டாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற சக தொழிலாளியான ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ராம்பிரசாத் கூறியது: நாங்கள் வறுமை காரணமாக பிழைப்புதேடி தமிழகத்துக்கு வந்த ஏழைகள். திரிநாத் கட்டா தனது குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்தவா். திக்கற்று நிற்கும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு போதிய உதவிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டும். புலம்பெயா் தொழிலாளா்களின் உயிருக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றாா்.