மூளைச்சாவு அடைந்தவா் உடல் உறுப்புகள் தானம்

Published on

தருமபுரி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், உத்தனப்பள்ளி அருகேயுள்ள கண்ணசந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (50). இவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாகக் கூறி, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காகத் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து அவரது உறவினா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்தனா். அதன்படி, அவரது இரு சிறுநீரகங்கள் மற்றும் இதயம் ஆகியவை தானம் செய்யப்பட்டன. பின்னா், முருகேசனின் உடலுக்கு உரிய அரசு மரியாதை செலுத்தப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com