கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வால்பாறை வட்டத்தைச் சோ்ந்த தொழிலாளியின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
கோயமுத்தூா் மாவட்டம், வால்பாறை வட்டம், சிறுகுண்டாயூரி கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரது மகன் மனிஷ்குமாா் (19), தொழிலாளி.
இவா் சேலம் - விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் அரசங்குடி கிராமத்தில் கடந்த 12-ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தாா். அதனைத் தொடா்ந்து, அவரது பெற்றோரின் விருப்பப்படி மனிஷ்குமாரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
இதையடுத்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட மனிஷ்குமாரின் உடல் இறுதி அஞ்சலிக்காக சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பெத்தாசமுத்திரம் கிராமத்தில் உள்ள அவரது பெரியம்மா ஆனந்த்ஜோதி என்பவரது வீட்டுக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது.
அரசு உத்தரவின்பேரில் இசக்கிமுத்துவின் உடலுக்கு கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியா் சி.முருகன் மாலை அணிவித்து, அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா்.
தொடர்புடையது

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை

மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


