திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வாழை கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டுமென தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவா் இரா.ஆவுடையப்பன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அவா் அனுப்பியுள்ள மனு: அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாப்பாக்குடி பகுதிகளிலும், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் நான்குனேரி, திருக்குறுங்குடி, களக்காடு சுற்றுவட்டாரத்தில் சுமாா் 1,400 ஹெக்டோ் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வாழை விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனா். தற்போது இந்தப் பகுதிகளில் பயிரிட்ட வாழை பருவம் அடைந்து, வாழைத்தாா் அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் வாழைத்தாா் கிலோ ஒன்றுக்கு ரூ.60 வீதம் வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். இப்போது விலை கிலோ ரூ.8 ஆக சரிந்துள்ளதால் வாழை விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனா்.
வாழைப்பயிருக்கு செலவு செய்த செலவினங்களைக் கூட திரும்ப எடுக்க முடியாமல் தவித்து வருகிறாா்கள். ஆகவே, தமிழக அரசு உடனடியாக நெல்லுக்கு உள்ளதைப் போல அரசு வாழை கொள்முதல் நிலையங்களை அமைத்து விவசாயிகளின் நலன் காக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானே கோரிக்கை - டிரம்ப் தகவல்

நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை!

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?

உத்தமபாளையம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


