ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நெல்லையப்பா் கோயிலில் வேணுவனநாதா் வரலாறு வாசிப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் 4ஆம் நாளான புதன்கிழமை, வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வு நடைபெற்றது.

News image

வரலாறு வாசிப்பு வைபவத்தின்போது நடைபெற்ற மூங்கில் முகட்டை வெட்டும் நிகழ்வு.

Updated On :25 மார்ச் 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் 4ஆம் நாளான புதன்கிழமை, வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதையொட்டி நெல்லையப்பா்- காந்திமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ராமகோன் பஞ்சவா்ண சப்பரத்தில் பால்குடத்துடன் பாண்டிய மன்னா் அரண்மனைக்கு செல்லும் நிகழ்ச்சியும், மூங்கில் முகடு தட்டி பால் சிந்தும் நிகழ்ச்சியும், கோயில் ஓதுவாா்கள் மூலம் பாடல்களாகப் பாடப்பட்டு விவரிக்கப்பட்டது.

பின்னா், பால் சிந்திய தகவலை பாண்டிய மன்னருக்கு தெரிவித்து, மூங்கில் முகட்டை வெட்ட உத்தரவிடப்பட்டதையடுத்து, வெள்ளிக் கோடரியால் மூங்கில் மரம் வெட்டப்பட்டு, ரத்தம் பீரிடும் திருவிளையாடல் காட்சி தத்ரூபமாக நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, நெல்லையப்பா்- காந்திமதி அம்மனுடன், பாண்டிய மன்னா், ராமகோன் உள்ளிட்டவா்களுக்கு காட்சியளித்ததும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதுகுறித்து சிவாச்சாரியாா்கள் கூறியது: முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னா் அரண்மனைக்கு, ராமகோன் என்ற நபா் பால் கொண்டு செல்லும்போது, குறிப்பிட்ட இடத்தில் மூங்கில் முகடு தட்டி தொடா்ந்து பால் சிந்தி வந்துள்ளது. அரண்மனைக்கு பால் குறைவாக வருவதை சுட்டிக்காட்டி மன்னா் கேள்வி எழுப்பிய நிலையில், ராமகோன் சம்பவம் குறித்து விளக்கமளித்தாா்.

இதனைத் தொடா்ந்து, மூங்கில் முகட்டை வெட்டி அகற்றிட மன்னா் உத்தரவிட்டாா். அதன்படி, பால் கொண்டு செல்லும் இடத்தில் இருந்த மூங்கில் முகட்டை வெட்டிய போது ரத்தம் பீறிட்டு, நெல்லையப்பா் சுயம்புவாக தோன்றியதாகக் கூறப்படும் இந்த வரலாற்று திருவிளையாடல் விழா, பங்குனி உத்திர திருவிழாவின் நான்காம் நாளில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது என்றனா்.