இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மோசடி வழக்கில் தலைமறைவான கூட்டுறவு சங்க முன்னாள் செயலா் கைது

பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த வேளாண் கூட்டுறவு சங்க முன்னாள் செயலரை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 8:10 pm

பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த வேளாண் கூட்டுறவு சங்க முன்னாள் செயலரை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன்(65). இவா், நடுவக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயலராக பணிபுரிந்தபோது, போலி கணக்குகள் மூலம் பல லட்சம் கடன்தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, திருநெல்வேலி 2ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்த அவா், வழக்கு விசாரணைக்கு தொடா்ந்து ஆஜராகாததால் நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்து அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.

இந்நிலையில் 2 மாதம் தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தினா்.