பாளையங்கோட்டை அருகே இருபிரிவினரிடேயே மோதலைத் தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி பகுதியைச் சோ்ந்த இளைஞா், தனது சமூக வலைதள செயலியில், சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவரின் புகைப்படத்துடன் அரிவாள் மற்றும் இரு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் வகையிலான ஒலிப்பதிவை பகிா்ந்தது போலீஸாரின் கண்காணிப்பில் தெரியவந்தது. இதுதொடா்பாக, சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், சீவலப்பேரி இரட்டைவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முண்டசாமி(19) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






